Tuesday, 28, Nov, 3:42 PM

 

கிண்ணியாவின் முதல் தாதி (ஆண்) உத்தியோகத்தர் எஸ்.எம்.தாரிக் அவர்களாவர். இவர் மர்ஹூம் சதக்கத்துல்லா – சித்தி பரீதா தம்பதிகளின் புதல்வராக 1973.04.02 இல் குறிஞ்சாக்கேணியில் பிறந்தார்.
குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை ஆரம்பித்த இவர் க.பொ.த (சா.த) வரை அங்கு கற்றார். உயர்தரம் கற்பதற்காக 1990 இல் கிண்ணியா மத்திய கல்லூரியில் இணைந்த இவர் 1993 இல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார்.
1995 இல் பதுளை தாதியர் கல்லூரியில் இணைந்த இவர் 1998 இல் தாதி உத்தியோகத்தராக நியமனம் பெற்றார் இந்த வகையில் கிண்ணியாவின் முதல் ஆண் தாதி உத்தியோகத்தர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
தாதி உத்தியோகத்தராக கண்டி போதனா வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை, மூதூர் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றியுள்ளார். கிண்ணியா மாவட்ட வைத்தியசாலையில் தற்போது கடமையாற்றி வருகின்றார். மலேசியப் பல்கலைக்கழகத்தில் தாதியப் பட்டப்படிப்பை இவர் நிறைவு செய்துள்ளார்.
இரத்ததான நிகழ்வு, நடமாடும் மருத்துவ சேவை என்பவற்றில் அதிகளவு பங்களிப்புச் செய்துள்ள இவர் தனது இந்த தொழில் நுழைவுக்கு தூண்டுகோளாக இருந்தவர்கள் என இலங்கை வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த எம்.என்.ஹலீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மகரூப் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார்.
எம்.ஏ.சீ.ரமீஸா இவரது வாழ்க்கைத்துணைவி. சம்ஹா ஹனான், ரோசினி அனம், திக்ரா ஹானிம், செய்யித் அல் தகீ ஆகியோர் இவரது பிள்ளைகள். இன்னும் பணிசெய்யக் கூடிய வாய்ப்பு இவருக்கிருக்கின்றது. இவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துவோம்.

தேடல்:


ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners