பெரியகிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் சிறு சுய வியாபாரத்தை தொழிலாகக் கொண்டிருந்தார். நாகுரான் அப்பா என்றும் இவரை அழைப்பர்
கொரோனா 2வது அலையின் போது பாதிக்கப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2021.02.23 இல் தனது 79 வது வயதில் காலமானார். கிண்ணியாவில் இடம்பெற்ற முதல் கொரோனா மரணம் இவருடையதாகும்.
இவரது ஜனாஸா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறாக திருகோணமலை பொது மயான தகனச்சாலையில் எரிக்கப்பட்டது.
றுக்கூன் பீவி இவரது வாழ்க்கைத் துணைவியாவார். ஜூனைதா, நஜீமா, நஸார், பரீதா, சகீதா, மர்ஹூம் பஸீர், ரபீக், ரிஸானா, கடாபி, முகம்மது ராபி, இக்பால் ஆகியோர் இவரது பிள்ளைகளாவர்.
கிண்ணியா அடப்பனார்வயல் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது 1942.11.20 இல் பிறந்தவர். அப்துல் ஜெப்பார் - முகம்மது பாத்தும்மா ஆகியோர் இவரது பெற்றோர். அல்லாஹூம்மஹ் பிர்லஹூ வர்ஹம்ஹூ
தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்
Comment