
தினம் தினம் ஒரே வகையான கேள்விகளுடன் தொலைபேசி,Inboxஇல் வந்து குவிகின்றன.ஒரு சில கேள்விகளுக்கு COVID Intermediate Care Center, Covid High Dependent Unit, COVID Vaccination program இவற்றில் வேலை செய்த அணுபவத்துடன் பதிலை எழுதுகிறேன்.
#COVID Vaccine பெற்றுக்கொண்டவர்களுக்கும் Corona தொற்று மற்றும் மரணம் ஏற்படுகிறதா?

இலங்கையை பொறுத்தவரை இன்று (25-08-2021) அதிகாலை 2.50 மணி வரைக்கும் 7750 corona மரணங்கள் பதிவாகியுள்ளது.இந்த மரணங்களில் 90%ற்கும் மேற்பட்டவர்கள் Covid Vaccineஐ பெற்றுக்கொள்ளதவர்கள்.Vaccine பெற்று மரணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள்.அதாவது நீண்ட கால நோய்களான நீரிழிவு நோய்(Diabetes Mellitus),சிறுநீராக நோய்(Kidney Disease),புற்றுநோய்(Cancer), அங்கங்கள் மாற்றம் செய்தவர்கள்(Organ Transplantation),மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்,பல வருடங்கள் புகைத்தல்/மது பாவணையாளர்கள்.இதை தவிர ஒரு Vaccineஐ மற்றும் பெற்றவர்கள் மற்றும் இரண்டாவது தடுப்பூசியை உரிய கால இடைவெளியில் பெறாதவர்கள்.
**பல்வேறுபட்ட Vaccines நாடாளவிய ரீதியில் வழங்கப்படுகிறது.இக்காலத்தை பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட Brandற்காக மட்டும் காத்திராது கிடைக்கின்ற ஏதாவது Vaccineஐ பெற்றுக்கொள்வது சிறந்தது.உங்களுக்கு Vaccineஇல் நம்பிக்கை இல்லை என்றால் அமைதியாக இருங்கள்.மாற்றமாக அடுத்தவர்களையும் எதிர்மறையான கருத்துக்களை கூறி அவரது Corona தொற்றுக்கு/மரணத்திற்கு நீங்களும் பங்கு கொள்ளாதீர்கள்.
#Covid Vaccineஐ பெற்றாலும் ஏன் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறையை பேண வேண்டும்?

அயலவர்கள்,ஒன்றாக வேலை செய்பவர்கள் …போன்றவர்களுக்கு உங்களால் Corona தொற்று ஏற்படுகிறது.
#Corona தொற்றுக்குள்ளாகியவர் எவ்வளவு காலங்களின் பின் COVID Vaccine ஐ பெற்றுக்கொள்ள முடியும்?

பெரும்பாலும் Corona தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக கருதப்பட்டாலும் இக்காலங்களில் Vaccine கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பெற்றுக்கொள்வது சிறந்தது.Corona தொற்றின்போது Plasma/Antibodies சிகிச்சையை பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்குள் COVID Vaccineஐ பெற முடியாது.மற்றையவர்கள் Corona குணமாகிய/PCR negative தினத்திலிருந்து 4-6 வாரத்திற்கு பின் Vaccine ஐ பெற முடியம்.
#Tetanus Toxoid(ஏப்பூசி) பெற்றுக்கொண்டிருப்பவர்கள் COVID Vaccineஐ பெற முடியுமா?
Tetanus toxoid முதலாவது Doseற்கு பின் நான்கு வாரங்கள்,ஆறு மாதங்கள்,ஐந்து வருடங்கள் காலப்பகுதியில் மற்றைய Dose வழங்கப்படும்.
COVID Vaccine அடிப்பதற்கு இரு வாரங்களுக்கு முன் Vaccine அடித்து இரு வாரங்களுக்கு பின் வேறு Vaccines அடிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.மிகவும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தவிர மற்றையவர்களுக்கு இது கண்டிப்பான எச்சரிக்கை இல்லை.
#Covid Vaccine பெற்றுக்கொண்ட பின் குளிக்க முடியுமா?

COVID Vaccine பெற்றுக்கொண்ட பின் எவ்வகையான உணவுவகைகளை தவிர்ந்து கொள்ள வேண்டும்?

இறைச்சி,இறால்/நண்டு போன்ற கடல் உணவு வகைகளை தவிர்ந்து கொள்வது சிறந்தது.
நன்றி,
Dr.Subiyan,
MBBS(SL),Fellowship in Diabetes Mellitus(Ind),Diploma in Psychology(SL)
Comment