கிண்ணியா நகர சபையின் வரவு - செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்பு, நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமினால் நேற்று (28) முன்வைக்கப்பட்டது.
அதற்கு எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகள் என்ற அடிப்படையில், இரண்டாவது வரவு - செலவுத் திட்டமும் தோற்கடிக்கப்பட்டது.
கிண்ணியா நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முண்ணனி என கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அங்கம் வகித்து வருகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரே தற்போதைய வரவு - செலவு திட்டத்தின் போது தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 14 நாள்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சபை அமர்வு முடிவுற்ற பின்னர் சபை முன்றலில் தவிசாளர் மற்றும் எதிர்த் தரப்பினர்களுக்கிடையே அமைதியின்மையும் ஏற்பட்டது.
Comment