பேருவளை மருதானையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமிழ்ச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கட்டுப்பாட்டாளர் பதவி வரை வகித்தவர். இறுதிக் காலத்தில் முஸ்லிம் சேவையின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினார்.
இலங்கை ரூபவாஹினியில் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். சிறந்த செய்தி அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை இரண்டு முறை வென்றவர். பல் வேறு நாடகங்களிலும் பங்கு கொண்டு கலைத் துறையிலும் பிரகாசித்தவர்.
அண்மைக் காலமாகத் திடீர் சுகவீனம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
அன்னாரை இறைவன் பொருந்திக் கொள்வானாக!
சனூஸ் முகம்மது பெரோஸ் வபாத்தானார்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் பிரபல அறிவிப்பாளரும், மிக சிறந்த ஒலிபரப்பாளருமான
சனூஸ் முஹமட் பெரோஸ் இன்று மாலை (03.02.2022) இறையடி சேர்ந்தார்.
Comment