கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 2022 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் கிண்ணியா சூட் இன்னில் வியாழக்கிழமை(26) இரவு 6 மணி தொடக்கம் 10.30 மணி வரை நடைபெற்றது.
அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபர் எ.எம்.எம். சலீமின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான 3 மணித்தியாலய செயலமர்வாக இராப்போசனத்துடன் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எ.நஸ்ஹர்கான் கலந்து கொண்டார்.அதேவேளை, விசேட அதிதிகளாக அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் எ.ஆர்.பரீட்,ஓய்வு பெற்ற கணிதப்பாட ஆசிரிய ஆலோசகரும் முன்னாள் அதிபருமான எ.எஸ். மஹ்ரூப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அல் அக்ஸா கல்லூரியின் பழைய மாணவரான ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் அல் ஹித்மத்துல் உம்மா பௌண்டேசனின் தலைவருமான கஸ்ஸாலி முகமட் பாத்தியின் அனுசரணையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அல் அக்ஸா கல்லூரிக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைத்துக்கொடுத்துள்ளதுடன் சுற்றுமதில் மற்றும் அல் அக்ஸா கல்லூரியின் பள்ளிவாசல் புனர்நிர்மாணமென தான் கற்ற பாடசாலைக்கு பல பங்களிப்புகளை சமூகசேவகர் கஸ்ஸாலி முகம்மட் பாத்திஹ் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comment