Sunday, 26, Mar, 11:05 AM

 

குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவை நோக்கி பயணித்த படகுப் பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியாவிற்கு ஆற்றை ஊடறுத்து மக்கள் பயணிக்க நேரிடுகிறது.

ஏற்கனவே இருந்த பாலம் உடைந்த நிலையில், மக்கள் படகுப் பாதையொன்றை போக்குவரத்திற்காக பயன்படுத்தி வந்தனர்.

இன்றும் காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 30 பேரை ஏற்றிய பாதை குறிஞ்சாக்கேணியில் இருந்து கிண்ணியா நோக்கி பயணமானது.

வறுமையாலும் பல்வேறு சவால்களாலும் பீடிக்கப்பட்டுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இத்தகையதோர் பேராபத்து நிகழப்போகின்றது என சற்றும் எதிர்பாராது பிள்ளைகளை வழியனுப்பி வைத்தனர்.

படகுப் பாதை கிண்ணியா நிலப்பரப்பை அண்மித்த நிலையில், பயணம் தலைகீழாக மாறியது.

திடீரென படகுப் பாதை கவிழ அதிலிருந்தவர்கள் ஆற்றினுள் வீழ்ந்தனர்.

பிரதேச மக்கள் தங்களின் உயிரையும் துச்சமாகக் கருதி மாணவர்களையும் மூழ்கிய ஏனையவர்களையும் காப்பாற்ற முயன்றனர்.

கடினமான பிரயத்தனத்திற்கு மத்தியில் காப்பாற்றப்பட்ட 14 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்த 4 மாணவர்கள் உள்ளிட்ட 6 பேரது சடலங்களும் கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது 11 மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கவலைக்கிடமான நிலையில் சிறுமியொருவர் திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Comment


மேலும் செய்திகள்

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023