Tuesday, 28, Nov, 4:12 PM

 




கொரோணா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்றை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தரப் பிரிவின் தொழில்நுட்பத் துறையில் கல்விகற்று வரும் எம்.எம்.சனோஜ் அகமட் என்ற மாணவன் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.

அரச அலுவலகங்கள், தனியார் நிறுவங்களில் பணியாற்றுவோர் மற்றும் சமூகத்திலுள்ள அனைவரும் அடுத்தவரின் உதவியின்றி தமக்கிடையில் 1 மீற்றர் சமூக இடைவெளியை பேணிக் கொள்வதற்கு இந்த சாதனம் பெரிதும் உதவுகிறது. இதேவேளை சமூக இடைவெளி மீறப்படும் போது ஒலியேழுப்பி கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் இரவு வேளைகளில் ஒளி எழுப்பி சமிஞ்சை செய்யும் வகையில் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது

தற்போது சந்தையில் கிடைத்த ஒரு சில உபகரணங்களை கொண்டு இந்த கழுத்துப்பட்டி தயாரிக்கப்பட்டுள்ளதால் இது பெரிதாக காட்சியளிக்கிறது. இந்த நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி கைக்கடிகாரம், அலுவலக அடையாள அட்டை, தலைக்கவசம், பென் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களிலும் செயற்படுத்த முடியும் என கண்டு பிடிப்பை மேற்கொண்டுள்ள மாணவன் சனோஜ் அகமட் தெரிவிக்கின்றார்.

இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்ட இந்த மாணவன் மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம்.முனாஸ், யு.எல்.ஜெஸ்மினா ஆகியோரின் சிரேஸ்ட புதல்வன் ஆவார்.

 றாசிக் நபாயிஸ்

 

Comment


 

Like us on Facebook (2)

 

Our Branding Partners