Tuesday, 28, Nov, 3:40 PM

 

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அண்மையில் தயாரிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் தரத்தில் பிரச்சினை இல்லை என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது

அண்மையில் பல எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான செய்திகளை அடுத்து, எரிவாயு சிலிண்டர்களின் கலவை மாற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன கேள்வி எழுப்பியிருந்தார்.

லிட்ரோ கேஸ் மற்றும் லாஃப்ஸ் கேஸ் ஆகியவற்றுக்கு இடையே லாபம் மற்றும் போட்டியை அதிகரிக்க அதன் பியூட்டேன்-புரோபேன் கலவையில் ஏற்பட்ட அபாயகரமான மாற்றத்தைத் தொடர்ந்து கசிவு வாயு வால்வுகள் குறித்து குணவர்தன எச்சரித்தார்.

எவ்வாறாயினும், லிட்ரோ கேஸ் லங்காவின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜானக பத்திரத்ன, அத்தகைய கூற்றுக்களை மறுத்துள்ளார், எரிவாயுவின் தரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

இது தொடர்பாக தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு செய்திகள் மற்றும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அவை பொதுமக்களை பயமுறுத்தும் வகையிலும், நிறுவனத்திற்கும், அரசுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

சுமார் 6 மில்லியன் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் பொதுமக்கள் வசம் இருப்பதாகத் தெரிவித்த ஜனக பத்திரத்ன, அனைத்து எரிவாயு சிலிண்டர்களும் தேசிய தர நியமங்களுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் அண்மையில் பதிவான எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களுக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை

(nw)

Comment


மேலும் செய்திகள்

  • சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    சிங்கப்பூரின் ஜனாதிபதியானார் தர்மன் சண்முகரத்தினம்

    Super User 03 September 2023

    சிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பூர்விகத் தமிழரான தர்மன் சண்முகர...

  • எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    எழுத்தாணி கலைப் பேரவை முன்னெடுக்கும் மொழிக்கற்கை நெறி மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தில் மொழி அறிவின் முக்கியத்துவம்

    Super User 03 September 2023

      எஸ்.எம்.நஜீப் | கிண்ணியா இறைவனின் படைப்புக்களில் உயர்ந்ததும், சிறந்ததுமான படைப்பினமா...

  • ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    ஒரு மாவட்டத்திற்கு ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம்

    Super User 28 March 2023

    நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து தனியார் துறையினருடன் ...

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023