Sunday, 26, Mar, 11:46 AM

 

திருகோணமலை – கிண்ணியா, குறிஞ்சாக்கேணி களப்பில் கடற்படையினர் படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.

கிண்ணியாவிற்கும் குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான பாலத்தின் நிர்மாணப்பணிகள் நிறைவடையும் வரை படகு சேவை முன்னெடுக்கப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதியை கருத்திற்கொண்டு இலவச படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், மாணவர்களுடன் பெற்றோர் உள்ளிட்ட ஏனையவர்களும் படகு சேவையை பயன்படுத்த முடியும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

தினமும் காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரையும் நண்பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரையும் இலங்கை கடற்படையின் இலவச படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒரு தடவையில் 25 பேர் ஏற்றிச்செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படகு சேவையை முன்னெடுப்பதற்கு தற்காலிக இறங்குதுறையும் இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை தொடர்ந்து, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த இலவச படகு சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதேவேளை, கிண்ணியாவிற்கும் குறிஞ்சாக்கேணிக்கும் இடையில் இன்று பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காலை 6.30-க்கும் பிற்பகல் 02 மணிக்கும் இலங்கை போக்குவரத்து சபையினால் பஸ் சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

கிண்ணியாவிலிருந்து கச்சக்கொடி தீவு, காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனையூடாக மீண்டும் கிண்ணியா நகருக்கு பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படகுப்பாதை கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய போது காப்பாற்றப்பட்டவர்களில் 11 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்கப்பட்ட 6 வயது சிறுமி ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெறுகிறார்.

அதிதீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்படுவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, 09 பேர் தமது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரி MJ.M. ஜிப்ரி தெரிவித்தார்.

6 சிறார்களும் 2 பெண்களும் ஆணொருவரும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு உளநல ஆலோசனைகள் தேவைப்படுவதால், தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்படுவதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரி MJ.M. ஜிப்ரி தெரிவித்தார்.

இதேவேளை, படகுப்பாதை விபத்தில் மீட்கப்பட்ட மற்றுமொரு சிறுமி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23 ஆம் திகதி காலை இடம்பெற்ற படகுப்பாதை விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த அனர்த்தம் தொடர்பில் கிண்ணியா நகர சபை தலைவர் உள்ளிட்ட 04 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(நன்றி NF)

Comment


மேலும் செய்திகள்

  • துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    துருக்கி மீட்புப் பணிகளில் பங்குகொள்ளும் 300 இலங்கை இராணுவ வீரர்கள்

    Super User 08 February 2023

    துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக...

  • வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    வரியை எதிர்த்து வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு?

    Super User 08 February 2023

    அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (08) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகி...

  • 75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    75 ஆவது சுதந்திர தின விழாவில் நடமாடும் கக்கூசி வைத்தது கூட தவறு என்கிறார்களே..

    Super User 08 February 2023

    75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளி...

  • இலங்கையின் டொலர் கையிருப்பு  11.7% அதிகரிப்பு

    இலங்கையின் டொலர் கையிருப்பு 11.7% அதிகரிப்பு

    Super User 08 February 2023

    2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெற...

  • GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    GGGI உடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இலங்கை

    Super User 08 February 2023

    இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை ...

  • துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    துருக்கியில் நிலநடுக்கம்; குறைந்தது 2300 இறப்புகள் பதிவாகியுள்ளன

    Super User 06 February 2023