வறுமைக் கோட்டின் கீழ் வாழும் நிரந்தர வீடுகளற்ற குடும்பங்களுக்கு பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வீடுகள் வழங்கும் வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் மற்றொரு நிரந்தர வீடு யைளிக்கும் நிகழ்வு நேற்று திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலை இயன் மருத்துவர் டிலக்சன் ஆகியோர்களின் பங்குபற்றுதலும் இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற தகரக் கொட்டில்கள் மற்றும் ஓலைக் குடிசைகளில் மிக நீண்டகாலம் கஸ்டப்பட்டு வாழ்ந்துவரும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் வன்னி ஹோப் நிறுவனமும் திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் இணைந்துஇன, மத. பிரதேச வேறுபாடுகளின்றி வீடுகளை நிர்மாணித்து வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் திருமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலையுற்றுக் கிராமத்தில் தாயை இழந்த மூன்று பேரப் பிள்ளைகளைப் பராமரித்துவரும் ஒரு விதவைத் தாயிக்கே இந்த வீடு நிர்மாணித்து வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த வீடு நிர்மாணிப்பு பணிகளுக்காக வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊடாக அவுஸ்ரேலியாவில் உள்ள பிரபல சமூக ஆர்வளர் திரு. விந்திரன் வெங்டாச்சலம் மற்றும் அவரது குமம்பத்தார் நிதிப் பங்களிப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Comment