நவம்பர் 16, 2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைப் பொலிஸாருக்கு 750 ஜீப்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பொலிஸ் விஷேட அதிரடிப் படைக்கான 150 ஜீப்புகளும் அடங்கும்.
அதன்படி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியால் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. மேலும் நிலைக்குழு பரிந்து ரைத்தபடி, இந்தியாவின் மஹிந்திரா & மஹிந்திராவுக்கு உரிய கொள்முதல் வழங்குவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதேவேளை, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு 32-35 இருக்கைகள் கொண்ட 500 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்ச ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது ஜனவரி 8, 2020 அன்று அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி, பேருந்துகளை வாங்குவதற்கு முன் தகுதி பெற்ற மூன்று நிறுவனங்களிடமிருந்து ஏலம் கோரப்பட்டுள்ளது.
(தினக்குரல்)
Comment