கிண்ணியாவின் முதன்மையாளர்கள் -13 முதல் வெளியீட்டாளர் மர்ஹூம் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம்

கிண்ணியாவின் முதலாவது புத்தக வெளியீட்டாளர் மர்ஹூம் அல்ஹாஜ் கே.எம்.எச்.அப்துல் காதர் ஆலிம் அவர்களாவர். இவர் 1933.12.15 இல் கிண்ணியா ஈச்சந்தீவில் மர்ஹூம்களான குஞ்சு முகம்மது ஹாஜியார் - பொன்னும்மா தம்பதிகளின் தலைமகனாகப் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை அல் ரவ்லா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கிண்ணியா அல் அக்ஸாக் கல்லூரியிலும் கற்றார். கல்ஹின்னை அறபுக் கல்லூரி, காலி சோலை அறபுக் கல்லூரி ஆகியவற்றில் மார்க்கக் கல்வி கற்ற இவர் இறுதியாக புத்தளம் காஸிமிய்யா அறபுக்கல்லூரியில் கற்று மௌலவி சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
Read more ...